கர்நாடக எம்பி நடிகை சுமலதாவுக்கு கொரோனா உறுதி.. தனிமைபடுத்திக்கொண்டார்..

ர்நாடகா மாநிலம் மாண்டியா தொகுதி எம்பி நடிகை சுமலதா. இவர் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி ஆவார். 56 வயதாகும் சுமலதாவுக்கு சில தினங்களுக்கு முன் தலை வலியும், தொண்டை வலியும் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா டெஸ்ட் செய்து கொண்டார். அதில் கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் தன்னை பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். கொரோனா தொற்று பற்றி அவர் கூறும்போது, ’தலைவலி, தொண்டை வலி இருந்ததால் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்துகொண்டேன். அதில் கொரோனா தொற்று உறுதியானது. வீட்டி லேயே தங்கி சிகிச்சை பெறுகிறேன். கடவுள் அருளால் என் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. விரைவில் குணம் அடைவேன் என்று நம்புகிறேன்’ என்றார் சுமலதா.


கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மாண்டியா தொகுதியில் சுமலதா சுறுப்பயணம் செய்தார். இதனால் அவருக்கு கொரோனா தொற்ற் ஏற்பட்டிருக் கலாம் எனத் தெரிகிறது.
சுமலதா தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்தி ருக்கிறார். தமிழில் ரஜினிகாந்துடன் முரட்டுக் காளை, கழுகு படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமலதாவின் கணவர் அம்ரீஷும் பிரபல கன்னட நடிகர் ஆவார். ரஜினியின் நெருங்கிய நண்பரான இவர் மத்திய மந்திரியாக பதவி வகித்திருக்கிறார். கடந்த 2018 ம் ஆண்டு பெங்களூருவில் அம்பரீஷ் காலமானார்