சதானந்த கவுடா உள்பட 3 கர்நாடக பாஜகவினருக்கு அமைச்சர் பதவி!

சென்னை:

பிரதமர் மோடி தலைமையிலான மெகா அமைச்சரவை இன்று இரவு பதவி ஏற்க உள்ள நிலையில், கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக எம்.பி. சதானந்த கவுடா, பிரகாட் ஜோஷி, சுரேஷ் அங்காடி ஆகிய  3 பேருக்கு கேபினட் அந்தஸ்த்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமித்ஷா தன்னிடம் கூறியதாக சதானந்தா கவுடா தெரிவித்து உள்ளார்.

17வது மக்களவைக்கான தேர்தலில் பாஜக 303 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள 28  தொகுதிகளில் 25 கிடைத்துள்ளது. இதன் காரணமாக மாநில ஆட்சியை கலைக்க ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது மோடி அமைச்சரவையில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முன்வந்துள்ளது.

அதன்படி முன்னாள்ம த்திய அமைச்சர் சதானந்தா கவுடா, பிரகாட் ஜோஷி, சுரேஷ் அங்காடி ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முடிவு செய்து இருப்பதாக  சதானந்தா கவுடா தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி