கர்நாடகா: எங்களது 2 எம்எல்ஏ.க்களை பாஜக கடத்திவிட்டது….குமாரசாமி

பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்றத்தில் நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதனால் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்கள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் 2 எம்.எல்.ஏ.க்களை பாஜக.வினர் கடத்திவிட்டனர் என்று குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘பாஜக.வினர் எங்கள் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களை கடத்திவிட்டனர். அவர்கள் திரும்ப வருவார்கள் என நம்புகிறேன். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு போதுமான பலம் உள்ளது’’ என்றார்.