1kana
பெங்களூர்:
துணைராணுவப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து வன்முறை கட்டுக்குள் வந்தது. இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்தாலும் பெரிய அளவில் எந்த பாதிப்புகளும் ஏற்பட வில்லை. பெரும்பாலா இடங்கள் மயான அமைதி போல காட்சி அளிக்கிறது. மைசூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து கர்நாடகாவில் நேற்று பயங்கர வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டக்காரர்களை அடக்க துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.
அதையடுத்து நடைபெற்ற துப்பாகி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து வன்முறை ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருந்தாலும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் இன்றும் அரங்கேறி வருகின்றன.
கர்நாடகாவில் இன்று அறிவிக்கப்படாத போன்று அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி உள்ளன.
பெங்களூரில் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனஙக்ள் மூடப்பட்டுள்ளன, தியேட்டர்களில் படம் திரையிடப்படவில்லை., பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
நகர பஸ்கள் இயக்கப்படவில்லை. கால் டாக்சிகள் ஓடவில்லை. தமிழ் பத்திரிகைகள் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் பத்திரிகைகளை எரித்துள்ளனர். ஆனால் அறிவிக்கப்படாத பந்த் போன்ற நிலை பெங்களூரில் காணப்படுகிறது
பதற்றம் நிறைந்த 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படும் எலக்ட்ரானிக் சிட்டியில் தமிழக பதிவெண் கொண்ட லாரிக்கு தீ வைக்கட்டதால் லாரியிலிருந்து ஓடி தப்பித்து அதன் டிரைவர் உயிரை காப்பாற்றிக் கொண்டார்.
பெங்களூருவில் ஒரு இடத்தில் தமிழர் நடத்தும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. விஜயாநகரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு கார் கன்னட அமைப்பி்னரால் அடித்து நொறுக்கப்பட்டது.
இதனிடையே மைசூருவில் அமைதியை ஏற்படுத்த 5 கம்பெனி துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.  மேலும் துணை ராணுவ படையினர் கர்நாடகாவிற்கு விரைந்துள்ளனர்.