விவசாயிகளை தீவிரவாதி என விமர்சித்த கங்கணா மீது கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு….!

கடந்த செப்டம்பர் 21-ம் தேதி கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியுரிமை சட்டத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள் தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கிறார்கள். இந்த சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் எல்லாம் தீவிரவாதிகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிராக கர்நாடகத்தில் ரமேஷ் நாயக் என்ற வழக்கறிஞர், தும்கூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தார்.

இந்திய தண்டனைச் சட்டம் 153A, 504, 108 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தும்கூரு நீதுமன்றம் நடிகை கங்கணா மீது வழக்குப் பதிவி செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்த சூழலில் நேற்று க்யாத்சாந்த்ரா காவல் நிலையத்தில் கங்கணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.