தமிழக அரசியலில் குதிக்கப்போகும் அண்ணாமலை ஐபிஎஸ்…..

சென்னை:

ர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, தமிழக அரசியலில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் திருச்சி அருகே உள்ள  கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய தந்தை குப்புசாமி.  அண்ணாமலை  மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்.  பின்னம் எம்.பி.ஏ படித்தார். காவல்துறை மீது உள்ள மோகத்தால், ஐபிஎஸ் படித்து தேர்வாகி காவல்துறை பணியாற்றி வருகிறார்.

தற்போது   பெங்களூரு தெற்கு மண்டல துணை காவல்துறை ஆணையராக இருந்து வருகிறார். பல்வேறு வழக்குகளை திறமையான கையாண்டும், ரவுடிகளை அடக்கி ஒடுக்கியும் திறமையான பணியாற்றியதால், அவரை கர்நாடக சிங்கம் என்றும் அன்போது மக்கள் அழைக்கிறார்கள்.

அண்ணாமலை தற்போது  பணிச்சுமை காரணமாக பதவியை ராஜினாமா செயவதாக அறிவித்து உள்ளார்.  அரசியல் ஈடுபடுவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ஆனால், ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ராஜினாமா குறித்து டிவிட் போட்டுள்ள  ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, சாதனையாளர்கள், இளைஞர்கள் அரசியலில் நுழைவது மகிழ்ச்சியூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.  அதைத்தொடர்ந்து அண்ணாமலை அரசியலுக்கு வர சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.