கர்நாடக களேபரம்: நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த பாஜக வலியுறுத்தல்

பெங்களூரு:

ர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற  நிலையில்,  மாநிலஅரசு மீதான  நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த  உத்தரவிட வேண்டும் சபாநாயரை  பாஜக வலியுறுத்தி உள்ளது.

குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக பல எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி, சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுதுள்ள நிலையில், அங்கு கடந்த 12ந்தேதி சட்டமன்ற கூட்டத்தொடரும் தொடங்கி உள்ளது. அன்றைய தினம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பதை சந்திக்க தயார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே (15ந்தேதி)  நடத்த  உத்தரவிட வேண்டும் சபாநாயகருக்கு பாஜக வலியுறுத்தி உள்ளது. கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும்  பெங்களூரு எலஹங்கா கேளிக்கை விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து பேசிய எடியூரப்பா, பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது,   முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மஜத கூட்டணி அரசு பெரும்பான் மையை இழந்துள்ளது. கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அக் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆனால், குமாரசாமி தலைமையிலான  கூட்டணி அரசு, தற்போது  பெரும்பான்மையை இழந்துள்ளதையடுத்து,அவர் த னது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மறுக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பதை நடத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், எம்எல்ஏக்களின் நம்பிக்கையை இழந்துள்ள குமாரசாமி, இனியும் முதல்வர் பதவியில் தொடருவது முறையல்ல. அக் கட்சிகளைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் ஏற்கெனவே மும்பையில் தங்கியுள்ள நிலையில், பதவியை ராஜிநாமா செய்துள்ள எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் உள்ளிட்டோரும் சமாதானத்தை விரும்பாமல் மும்பைக்குச் சென்று அவர்களுடன் தங்கியுள்ளனர்.

கூட்டணி அரசு நிலைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத சூழலில், முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்வதைத் தவிர, வேறு வழியில்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karnataka crisis, Karnataka Political crisis, Kumarasamy, Trust vote, Yediyurappa
-=-