ஜெ. குணமடைய கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் பிரார்த்தனை!

சென்னை:

டல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டுவதாக கர்நாடக, புதுச்சேரி முதல்வர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரங்கசாமி - சித்தராமையா - நாராயணசாமி
ரங்கசாமி   –   சித்தராமையா   –   நாராயணசாமி

முதல்வர் உடல்நலம் குன்றியிருப்பதை அறிந்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவர் விரைவில் குணமடைய வேண்டுவதாக அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அவர் விரைவில் குணைமடைய வேண்டுகிறேன் என சித்தராமையா கூறியுள்ளார்.

மேலும், பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், .

முதல்வர் ஜெ. விரைவில் குணமுடைய பிரார்த்தனை செய்கிறேன் ,..நம் அனைவரது வழிபாடும், வேண்டுதலும் அவரை உறுதியாக நலம் பெற செய்யும் என்று கூறி உள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தியில்,

தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றி வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது தமிழக முதல்வர் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பரிபூரண குணமடையவதற்கும், அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிடவும் என் சார்பாகவும், நான் சார்ந்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாகவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.