பெங்களூரு:

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பெங்களூரு  பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திக்கச் சென்ற  டி.டி.வி. தினகரனுக்கு சிறை நிர்வாகம்  அனுமதி மறுத்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, அவரது உறவினரான டிடிவி தினகரன் அவ்வப்போது சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், அமமுக கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்து வருவார்.

இந்த நிலையில், இன்று  பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்க அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்றார். பகல் 12 மணி அளவில் சென்ற  ஆனால் அவருக்கு சி றை நிர்வாகம் சசிகலாவை சந்திக்க மறுத்துவிட்டது.  இதன் காரணமாக டிடிவி தினகரன் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கத.