கர்நாடகா:  தனியார் பேருந்தில் பயங்கர தீ ! 3 பயணிகள் பலி

பெங்களூரு:

ர்நாடக மாநிலம் தார்வாதி-யில் இருந்து பெங்களூர் வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தில்  தீ பிடித்தது. இதில் 3 பயணிகள் உடல் கருகி இறந்தனர்.

பெங்களூருவில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள ஹப்பள்ளி நகரில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்து, திடீரென தீப்பற்றி எரிந்தது.

பேருந்தில் டிரைவர் கண்டக்டர் உள்டப 17 பேர் இறந்தனர். இந்த தீ விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

தீ பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.