கர்நாடகாவில் கோரம்: ஆற்றில் பஸ் பாய்ந்து விபத்து! 18 பேர் பலி

பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் பாலத்தின் சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றினுள் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் அதில் பயணம் செய்த பயணிகள் 18 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பஸ்சினுள் சிக்கி இருப்பவர்களையும், தண்ணீரில் தத்தளிப்பவர்களையும் அந்த பகுதியை சேர்ந்தவர்களும், மீட்பு பணியினரும்  மீட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம்  மாண்டியாவில் பாண்டவபுரா பகுதியில் உள்ள ஆற்றில் பஸ் விழுந்து மூழ்கி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.