பெங்களூரு:

ல்லூரியில் நடைபெறும் செமஸ்டர் தேர்வின்போது,  மாணவர்கள் ஒருவருக்கொருவர்  காப்பி அடிப்பதை தடுக்க தலையில் அட்டைப்பெட்டியை மாட்டிவிட்டு தேர்வு எழுத வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரி இந்த அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உளளது.

கர்நாடகாவின் ஹவேரி பகுதியில் உள்ள (Bhagat Pre-University College in Haveri) பகத் பல்கலைக்கழககல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்கவும், பிறரை  காப்பி அடிப்படை தடுக்கவும் நூதன முறையில்,  மாணவ, மாணவிகளின் தலையில் காலியான அட்டைப்பெட்டி ஒன்று கவிழ்த்து தேர்வு எழுத வைக்கப்பட்டது.

தலையில் ஹெல்மெட் போல் அட்டைப்பெட்டி அணிவிக்கப்பட்டது, மாணவ மாணவர்கள் தேர்வு எழுவதில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. குதிரைக்கு லாடம் கட்டியதுபோல மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டி கட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள்  தலையில் அட்டைப்பெட்டி அணிந்தபடிதேர்வு எழுதிய புகைப்படம் சமூகவலைதளங்களில்  வைரலானது. இதைக்கண்ட பலர் அதிர்ச்சி அடைந்து தங்களது கண்டனங்களை பதிவிட்டு உள்ளனர். மேலும் கல்வித்துறைக்கும் புகார் பறந்தன.

இதையடுத்து, கர்நாடக டிபிஐ-யின் துணை இயக்குநர் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்களை விலங்குகள் போன்று நடத்தும் உரிமையை யாருக்கும் கிடையாது. இந்த முறையற்ற செயலுக்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.