கர்நாடகாவில் ஒரே நாளில் 9 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு: 135 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் 9,058 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

கர்நாடகாவில் கொரோனாவின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. சாதாரண மக்களை மட்டுமல்லாது, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் பாதித்து வருகிறது.

இந் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது. 9,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 3,51,481 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 5,159 பேர் குணம் பெற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக 2,54,626 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

இன்றும் 100க்கும் அதிகமான கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.  இன்று மட்டும் 135 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனா பலியானவர்களின் எண்ணிக்கை 5,837 ஆக இருக்கிறது.