பெங்களூர்: 
டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஏழு  மாநிலங்களில் இருந்து கர்நாடாகா வருபவர்கள் ஒரு வாரம் நிறுவன தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடாக அரசு நேற்று, மாநிலங்களிடையே பயணம் செய்பவர்களுக்கான விதிமுறைகளை வெளியிட்டது.  இதில் மேற்குரிய 7 மாநிலங்களில் இருந்து வருபவர்களை ஒரு வாரம் தனிமைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்திற்கு சாலை வழியாகவோ, ரயில் மற்றும் விமானம் மூலமாக வருபவர்கள், ஏழு நாட்கள் இன்ஸ்டிடியூட்சனல் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என்றும், அவர்களிடம் இருந்து 5 ஆவது முதல் 7ஆவது நாளில், கொரோனா சோதனை நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விதிமுறை, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பினி பெண்கள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆகியோருக்கு பொருந்தாது. அதே போன்று சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படையை சேர்ந்தவர்களுக்கும் இந்த தனிமைபடுத்தல் விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குரிய 7 மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் அனைவரும், 14 நாட்கள் வீட்டிலேயே தனிமையாக இருக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

இதுகுறித்து  மூத்த சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து கர்நாடாகா வருபவர்களை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்கள், கர்நாடாகாவில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதற்கு, மகராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இருந்து வந்தவர்களே காரணம் என்று தெரிய வந்துள்ளது. தற்போது மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தல் விதிமுறை இதுபோன்று வருபவர்களை தடுக்க உதவும் என்றனர்.