கர்நாடகா: கோவில் பிரசாதத்தில் விஷம் – பூசாரி உட்பட ஆறு பேர் கைது!

கர்நாடகாவில் கோவில் பிரச்சாரத்தை சாப்பிட்டு 15 பேர் உயிரிழந்த வழக்கில் பூசாரி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பூசாரி, தலைவர், மேலாளர் என அனைவரும் பிரசாதத்தில் விஷம் கலந்தது தெரிய வந்துள்ளது.

poisened

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சுல்வாடி கிராமத்தில் உள்ளது தான் கிச்சுகட்டி மாரம்மா கோவில். இந்த கோவிலில் இம்மாதம் 15ம் தேதி நடந்த பூமி பூஜையின் போது அளிக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டவர்களில் 15பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரசாதத்தை சாப்பிட்ட மக்கள் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிரசாதத்தில் விஷம் கலந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கோவில் பூசாரி இம்மடி மகாதேவ சுவாமி, கோவில் அறக்கட்டளை தலைவர் தொட்டய்யா, மேலாளர் மாதேஷா அவரது மனைவி அம்பிகா, சின்னப்பி மற்று சமையல் காரர் புட்டசாமி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னப்பி மற்றும் மாதேஷா ஆகியோரிடையே கோவில் நிர்வாகத்தை கைப்பற்றுவது தொடர்பாக போட்டி இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக சின்னப்பி, பூசாரி உதவியுடன் பிரசாதத்தில் பூச்சி மருந்து கலந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளார். பிரசாதத்தில் விஷத்தை கலந்த சமையல் காரர் புட்டசாமி முதலில் தனது 12வயது மகள் அனிதாவிற்கு அதனை கொடுத்து சோதித்து இருக்கிறார். விஷம் கலந்த பிரசாத்தை சாபிட்ட அவரது ஊனமுற்றிருந்த மகள் உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.