கர்நாடகாவில் 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் – சபாநாயகர் அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் கூட்டணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களில் இதுவரை 3 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சபாநாயகர் ரமேஷ் குமார்.

புகாருக்கு உள்ளான சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யும் முழு அதிகாரம் தனக்குண்டு என்று தெரிவித்துள்ளார் சபா நாயகர் ரமேஷ் குமார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் எல் ஜர்கிஹோலி மற்றும் மகேஷ் குமதல்லி ஆகிய இருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சங்கரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் நிகழலாம் என்றும் பெங்களூருவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.