பெங்களூரு:

ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. 15.19 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது.

வழக்கமாக ஹம்பி எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கு வந்துவிடும். ஆனால் தேர்வு நடந்த அன்று வழக்கத்துக்கு மாறாக 8 மணிநேரம் தாமதமாக வந்தது.

அந்த ரயிலில் பயணித்த மாணவ,மாணவிகள் தேர்வு எழுதமுடியாமல் போனது.

தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

அதில், கர்நாடகா மாநிலத்தில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என ட்விட்டரில்  தெரிவித்துள்ளார்.