சுதந்திர போராட்ட தியாகியை , பாகிஸ்தான் உளவாளி கூறி பாஜக எம்.எல்.ஏ., வின் கருத்தால் சர்சை

விஜயபுரா: 

ர்நாடக மாநிலம், விஜயபுராவை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த எம்எல்ஏ., பசனகவுடா பாட்டீல் யட்னல், சுதந்திர போராட்ட தியாகியான எச்.எஸ். டோரெஸ்வாமியை, போலியான சுந்ததிர போராட்ட தியாகி என்றும்,  பாகிஸ்தான் உளவாளி போன்று நடந்து கொள்கிறார் என்று தெரிவித்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜயபுராவில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த எம்எல்ஏ., பசனகவுடா பாட்டீல் யட்னல், இந்தியாவில் நிறைய போலி சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளனர். அதில் ஒருவர் பெங்களுரில் இருக்கிறார். தற்போது நாம் டோரெஸ்வாமியை பற்றி பேச வேண்டும். அந்த வயதான மனிதர் எங்கே இருக்கிறார்? அவர் பாகிஸ்தான் உளவாளி போன்று செயல்படுகிறார் என்று தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு  காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா பொது கூட்டம் ஒன்றில் பேசுகையில்,  நாட்டிற்கு சுதந்திரம் பெற உதவியது காங்கிரஸ் தான் என்றும், அரசியலமைப்பை உருவாக்குவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்ததாகவும், சுதந்திர போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்களிப்பு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

சித்தராமையாவின் அறிக்கைக்கு பதிலளித்த யத்னல், சோனியா காந்தி, ராகுல் காந்தி அல்லது சித்தராமையா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் எப்போது சுதந்திரத்திற்காக போராடினார்களா? அல்லது சிறைக்குச் சென்றார்களா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த சூழலில், யட்னல், 102 வயதான டோரெஸ்வாமியை விமர்சித்து பேசினார். அப்போது, யட்னல், டோரெஸ்வாமியை பாகிஸ்தான் உளவாளி போல நடந்து கொள்ளும் ஒரு போலி சுதந்திர போராட்ட தியாகி” என்றும் குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ஒரு எம்எல்ஏ., சுந்ததிர போராட்ட தியாகி ஒருவரை இப்படி பேசியது மன்னிக்க முடியாதது என்று சாட்டியுள்ளது.  இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாஜக யட்னல், தனது இனவாத பேச்சுக்கு மன்னிப்பு கோருவதுடன், தனது தவறான பேச்சுக்கு பொறுப்பேற்று கொண்டு பதவியை விட்டு விலக வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும், எம்.எல்.சியுமான என்.ரவிக்குமாரையும் தொடர்பு கொண்டு கேட்ட போது, யட்னல் அப்படி பேசியது சரியல்ல என்று கூறினார். “டோரெஸ்வாமி மீது எங்களுக்கு நிறைய மரியாதை உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட தியாகியை, பாகிஸ்தான் ஏஜென்ட் என்று அழைத்த பாஜக எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் யட்னல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம், முன்னாள் முதல்வர் சித்தராமையா கேட்டு கொண்டுள்ளார். வெறுக்கத்தக்க பேச்சுகளை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய சிக்கல் காத்திருக்கிறது என்று சித்தராமையா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி