கர்நாடகா: 3 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப் பதிவு

--

பெங்களூரு:

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எந்திர கோளாறு காரணமாக பெங்களூரு ஹெப்பல் தொகுதி லொட்டேகொல்லஹல்லி வாக்குச்சாவடியில் நேற்று வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

1,444 வாக்காளர்களை கொண்ட இந்த வாக்குச்சாவடியில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோல் ராய்ச்சூர் மாவட்டம் குஸ்ட்டாகி தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளில் நாளை மீண்டும் வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.