கர்நாடகா: காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

--

பெங்களூரு:

கர்நாடகாவில் தொடர் மழை காரணமாக அங்குள்ள அணைகளின் நீர்மட்மட் உயர்ந்தது.

இதனால் உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. மேலும் கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து 35,625 ஆயிரம் கன அடியாகவும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் மொத்த அளவு 85,625 கன அடியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.