மேகதாது அணை விவகாரம்: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

சென்னை:

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான செயல்திட்டத்தை மத்தியஅரசிடம் கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்துள்ளது. பெங்களூருவின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில், காவிரி ஆற்றில் மேகதாது என்ற இடத்தில்  5 ஆயிரத்து 912 கோடி செலவில்  புதிய அணை கட்ட கர்நாடகா அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசிடம் வழங்கி உள்ளது.

ஏற்கனவே காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருவதன் காரணமாக இருமாநிலங்கள் இடையே பிரச்சினை  நீடித்து வரும், நிலையில்,  தமிழகத்தின் எல்லைப்பகுதியில் மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு தற்போது கிடைத்து வரும் காவிரி நீரும் தடுக்கப்பட்டு வரும் என தமிழக அரசு மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக அரசின் செயல்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அதில்,  காவிரியில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா வைத்த கோரிக்கையை பரிசீலிக்கக் வேண்டாம் என்றும், கர்நாடக  அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரானது. தமிழக அரசின் ஒப்புதலின்றி கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்ககூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி