பெங்களூரு:

ர்நாடக  முதல்வராக எடியூரப்பா மீண்டும் முதல்வராக பதவி ஏற்று, சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபித்துள்ள நிலையில், சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில், புதிய சபாநாயகரை தெர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தீவிரமாகி இறங்கி உள்ளது. கர்நாடக  பாஜக மூத்த உறுப்பினரான கே.ஜி.போபையாவை சபாநாயகராக நியமிக்க பாஜக முயற்சி  மேற்கொண்டுள்ளது. இவர் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார் இருந்து வந்தார். அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், அவர் காலம் தாழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. குமாரசாமி தலைமை யிலான முந்தைய அரசுக்கு ஆதரவாக சபாநாயகர்  செயல்பட்டு வருவதாக  குற்றம் சாட்டப்பட்டு வந்தது.  அதைத்தொடர்ந்து, ரமேஷ்குமார்  மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கர்நாடக சட்டமன்ற பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ரமேஷ்குமார், அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட வழிவகுக்க மாட்டேன் என்று தெரிவித்த நிலையில்,இன்று எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும், தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில்,  ரமேஷ்குமாருக்கு பதிலாக பாஜக மூத்த உறுப்பினரான கே.ஜி.போபையாவை சபாநாயகராக நியமிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இவர் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை கர்நாடக சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்துள்ளதுடன், கடந்த 2018ம்ஆண்டு, கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்ததும், எடியூரப்பாவை மாநில கவர்னர் வஜுபாய் வாலா முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், எடியூரப்பாவை உடனே மெஜாரிட்டி நிரூபிக்க உச்சநீதி மன்றம் உத்தர விட்டது. அதைத்தொடர்ந்து. சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக போபையாவை கவர்னர் நியமனம் செய்திருந்தார். ஆனால், அப்போது எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடினார்.

தற்போது எடியூரப்பாக பெரும்பான்மையை  நிரூபித்துள்ள நிலையில், புதிய சபாநாயகராக போபையாவை தேர்ந்தெடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.