துபாய் லாட்டரியில் கர்நாடக இளைஞருக்கு 23 கோடி ரூபாய் பரிசு…

 

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணப்பா, பொறியாளர் ஆவார்.

துபாய் நாட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளவர்.

அண்மையில் நடந்த மெகா குலுக்கலில் கிருஷ்ணப்பாவுக்கு 24 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது:

“நானும், நண்பர்களும் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் லாட்டரி சீட்டு வாங்குவோம். இந்த முறை நான் மட்டும் தனியாக இரண்டு லாட்டரி சீட்டுகள் வாங்கினேன். அதில் ஒரு சீட்டுக்கு 24 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

லாட்டரி குலுக்கலை நான் நேரடியாக டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் வாங்கிய சீட்டுக்கு 24 கோடி ரூபாய் விழுந்துள்ளதாக அறிவித்தார்கள்.

என்னால் நம்ப முடியவில்லை. இந்த பணத்தில் எனது சொந்த ஊரில் பெரிய பங்களா கட்டுவேன், மிச்ச பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வேன்” என்கிறார், குரோர்பதி கிருஷ்ணப்பா.

– பா. பாரதி