பெங்களூரு

டந்த 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கர்நாடகாவில் கடந்த 118 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது

கர்நாடக மாநிலத்தில் இந்த மாத தொடக்கம் முதல் பருவமழை  மிகவும் அதிகமாகப் பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. உத்தர கன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய பகுதிகளிலும் மற்றும் குடகு, சிக்கமகளூரு, சிவமோகா மற்றும் ஹாசன் பகுதிகளிலும் பல இடங்களில் நிலச்சரிவால் கடும் துயர உண்டாகி இருக்கிறது. மழை காரணமாக 4.7 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளன.

மாநிலம் எங்கும் மொத்தம் 18000 கிமீ தூரமுள்ள சாலைகள், 650 பாலங்கள் மற்றும் 54000 மின் கம்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர 58,620 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1220 முகாம்கள் திறக்கப்பட்டு அங்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க  வைக்கப்பட்டனர். அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.10000 அளித்துள்ளது. இதைத் தவிர வீடு பழுது பார்க்க ரூ 1 லட்சம், மற்றும் முழுமையாக வீடுகளை இழந்தோருக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது

கடந்த 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மாநிலத்தில் மிகக் கன மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 270% அதிகமாகும். இந்த மழையில் 31 பேர் மரணம்  அடைந்துள்ளனர். மேலும் 15 பேர் காணாமல் போய் உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த 118 வருடங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த ஒரு வாரக் காலத்தில் பெய்துள்ளது..