Random image

கார்த்தார்பூர் நடைபாதை திறக்கப்பட வாய்ப்பில்லை: மத்தியஅமைச்சர் வி.கே.சிங்

டில்லி:

குரு நானக்கின் 550வது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, பாகிஸ்தானில் உள்ள கார்த்தார்பூர் நடைபாதை திறக்கப்பட வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெளிவுபடுத்தி உள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் எந்தவித உறுதிமொழியும் அளிக்கவில்ல என்றும் கூறி உள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்கும் விழாவுக்கு சென்ற பஞ்சாப் மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரருமான  நவ்ஜோத்சிங் சித்து, அங்கு பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவினர். அதுமுதல் சர்ச்சகள் தொடர்கின்றன.

இதுகுறித்து விளக்கம் அளித்த சித்து, அவரை சர்ச்சைகள் தொற்றிக்கொண்டன. பாகிஸ்தானில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற குருத்வாரா கார்த்தார்பூர் சாஹிப்புக்கு இந்திய மக்கள் வருவதற்கு ஏதுவாக வழித்தடம் உருவாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி தன்னிடம் தெரிவித்தார். அப்போது என் அன்பை வெளிப்படுத்துவதற்காக அவரைக் கட்டியணைத்தேன் என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தான் அரசாங்கம் ஸ்ரீ குரு நானக் 550 வது லைட் நாள் தேவ் ஜி சம்பவ இடத்திலேயே கர்த்தார்பூர் தாழ் வாரம் திறக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு  விசா இல்லாமல் கார்த்தார்பூர் சாஹிப் சென்று பார்க்க முடியும் என்று தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இதுகுறித்து விளக்கம் தெரிவித்தது. அதில், இந்த விவகாரத்தில் உடடினயாக முடிவு எடுக்க முடியாது எனறும், இது ஒரு நீண்ட செயல்முறையாகும், இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புக்குப் பின்னர் அது முடிவெடுக்கப்படலாம். அடுத்த ஆண்டு ( 2019)  இல் பாக்கிஸ்தான் ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி 550வது ஒளி விழா கொண்டாடும் வகையில் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வி.கே.சிங்,  சீக்கியர்கள் வழிபாடு நடத்த ஏதுவாக, பாகிஸ்தானில் உள்ள புகழ்பெற்ற குருத்வாரா கார்த்தார்பூர் சாஹிப்புக்கு  வழித்தடம் உருவாக்கப்படும்எ ன வெளியான தகவல் தவறானது என்றும்,  இது குறித்த எந்த திட்டத்தையும் பாகிஸ்தான், இந்தியாவிடம் அளிக்கவில்லை என்று கூறினார்.

மேலும், இது  நீண்ட கால பிரச்சினை , இதில் நடவடிக்கை எடுக்கப்பட்டால், தெரியப்படுத்துவோம் என்றும் வி.கே.சிங் விளக்கமளித்துள்ளார்