என் வழக்கு காரணமாகவே கார்த்தி சிதம்பரம் கைது: சுப்பிரமணியசாமி

டில்லி:

ன்று காலை வெளிநாட்டில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திலேயே கைது செய்து, டில்லிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி, நான் தொடர்ந்த வழக்கு காரணமாவே  கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இதில்  பாஜக அரசுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என கூறினார்.

ஐஎன்எக்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று அவரை கைது செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன்சாமி, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக  கார்த்தி சிதம்பரம் மீது நான்தான் வழக்கு தொடர்ந்தேன்.. பாஜக அரசு வழக்கு போடவில்லை என்றார்.

எனது வழக்கின் அடிப்படையிலேயே நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை   குறைக் கூறமுடியாது. இந்த வழக்கில் பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

மேலும், இந்த  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தைத்தான்  முதலில் கைது செய்ய வேண்டும். அவர் கையெழுத்து போட்டதால்தான் முறைகேடு நடந்துள்ளது என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி