ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு!

டில்லி:

.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தினை அமலாக்க துறை கைது செய்வதற்கான தடையை மார்ச் 22ந்தேதி வரை டெல்லி உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ஏற்கனவே 20ந்தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 2 நாட்கள் நீட்டித்து, 22ந்தேதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு காரணமாக சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை, அமலாக்கத்துறையிம் கைது செய்ய முயற்சி செய்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டில்லி உயர்நீதி மன்றம் வரும் 20ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரத்திம் ஜாமின் மனுவின் மீதான விசாரணை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா  வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 2 நாட்கள் நீட்டித்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேதியை நீட்டிக்க அமலாக்க துறை எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காததால், இந்த வழக்கு  வரும் 22ந்தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karthi Chidambaram in INX Media case: Delhi High Court extend 2 days more to Prohibits Enforce Department to arrest, ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை உத்தரவு மேலும் நீட்டிப்பு!
-=-