சென்னை,

தேடப்படும் நபர்  கார்த்தி சிதம்பரம் என்ற மத்தியஅரசின் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், கார்த்தி வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது என விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 4ந்தேதி காத்திக் சிதம்பரம் தேடப்படும் நபர் என்று திடீர் அறிவிப்பை வெளியிட்டது இந்திய உள்துறை அமைச்சகம். பரபரப்பை ஏற்படுத்திய இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தார்,

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவேதான் அவர் தேடப்படும் நபர் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்தது என்று கூறினார்.

மல்லையாவை போல் கார்த்தி சிதம்பரமும் தப்ப முயற்சி செய்யக்கூடாது என்பதாலும், இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக வில்லை எனவும் மத்திய அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு மல்லையாவுடன் ஒப்பிட்டு பேச கூடாது என கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வரும் ஆகஸ்ட் 8ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

கடந்த 4ந்தேதி திடீரென மத்திய உள்துறை அமைச்சகம் முன்னாள் மத்திய அமைச்சரின் மகன் கார்த்திக் சிதம்பரம் தேடப்படும் நபர் (லுக்அவுட்) என சுற்றரிக்கை வெளியிட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை  உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது  ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில்   கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ90 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும்,   அவர் வெளிநாடுகளுக்கு விமானம் மூலமோ, கடற்பயணம் மூலமோ தப்பிச் செல்ல தடை விதிக்கும் வகையில் லுக்அவுட் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.