கார்த்தி சிதம்பரம் மீதான ‘லுக்அவுட்’ நோட்டீஸ் செல்லும்: உச்சநீதி மன்றம்

டில்லி,

ன்னிய செலாவணி மோசடி வழக்கில் டில்லி தேடப்படும் நபர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு தடை விதிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ அறிவித்த லுக்அவுட் நோட்டீஸ் செல்லும் என்றும், வரும் 11ந்தேதி வரை இந்த நோட்டீஸ் செல்லுபடியாகும் என்றும்  உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இதன் காரணமாக அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், வெளி நாடு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்தது..

இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது.  இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில், சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது,  கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்குத் தடை இல்லை என்று உத்தரவிட்டதோடு, சி.பி.ஐ முன் ஆஜராகி விளக்கமளிக்கத் தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பியது.

அதைத்தொடர்ந்து டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இதுவரை இரண்டுமுறை நேரில் ஆஜரானார் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, கார்த்திக சிதம்பரத்திற்கு எதிராக கொடுக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் வரும் செப்டம்பர் 11 வரை தொடரும் என்று கூறி உள்ளது.

மேலும், கார்த்தி சிதம்பரத்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.