டில்லி,

போதிய ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கு கொடுத்து வருவதால், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை,  தேடப்படும் நபர் (லுக்அவுட்) என்று மத்திய அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், கைது செய்ய சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்து. இதை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

வரும் 23ந்தேதி டில்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தர விட்டது. மேலும் சிபிஐயின் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க தயங்குவது ஏன் என்றும், மத்திய அரசின் லுக்அவுட் (தேடப்படும் நபர்) உத்தரவுக்கும் தடை விதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது.

,இதைத்தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்,  சிபிஐ முன்பு இன்றே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கார்த்தி சிதம்பரம் தயாராக இருப்பதாகவும்,  சிபிஐ முன்பு ஒருபோதும் ஆஜராகவில்லை என கூறியதால்  கார்த்தி சிதம்பரம்  மதிப்பு குறைந்துவிட்டது என கூறினார்.

அதையடுத்து வழக்கு விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

முன்னதாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுவதை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்தார். கண்காணிக்கப்படும் நபர் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் நீதிமன்றம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வரும் 23ந்தேதி  சிபிஐ முன்பு ஆஜராகும்போது, கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது  ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில்   கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ90 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும்,  அவர் வெளிநாடு களுக்கு விமானம் மூலமோ, கடற்பயணம் மூலமோ தப்பிச் செல்ல தடை விதிக்கும் வகையில் லுக்அவுட் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4ந்தேதி காத்திக் சிதம்பரம் தேடப்படும் நபர் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு குறிப்பிடத்தக்கது.