டில்லி:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நேற்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் உடடினயாக டில்லி அழைத்துச்செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் டில்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து காரசார விசாரணை நடைபெற்று வருகிறது.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரம் அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகவும், நெஞ்சு  வலிப்பதாகவும், கேள்விகளுக்க பதில் கூற மறுத்து வருவதாகவும் கூறினர்.

மேலும், இந்திராணி முகர்ஜி கொடுத்த வாக்குமூலம் மற்றும் அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவனங்களின் அடிப்படை யிலேயே கார்த்திக்கை கைது செய்திருப்பதாகவும், அவரிடம் மேலும் விசாரணை செய்ய 15 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பும்படியும் கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ரகசிய ஆவணங்களை சிபிஐ  நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.

அதைத்தொடர்ந்து வாதாடிய சிபிஐ வழக்கறிஞர், ஆதாரங்கள் திருப்தி அளித்தால் கார்த்தியை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் விசாரிக்க அனுமதித்தால் மேலும் பல முறைகேடுகள் பற்றி தெரிய வரும் என்றும் சி.பி.ஐ. கூறியுள்ளது.

சிபிஐ வாதம் முடிவடைந்த நிலையில் கார்த்தி சிதம்பரம்  கார்த்தி சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடி வருகிறார்.

ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி இருவரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.