பாக்யராஜ் கண்ணன் படத்தின் தலைப்பு ‘சுல்தான்’ னா…..?

‘ரெமோ’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு ‘சுல்தான்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டபோது, “பல தலைப்புகள் பரிசீலனையில் உள்ளன. இன்னும் தலைப்பை முடிவு செய்யவில்லை” என்றார்.

விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக ராஷிமிகா நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘சுல்தான்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.