கார்த்திக் தங்கவேலின் அடுத்த படத்தில் கார்த்தி …!

அடங்க மறு’ படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலின் அடுத்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் தங்கவேல் – கார்த்தி இணையும் படத்தை, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ‘தேவ்’ படத்தையும் இந்த நிறுவனம்தான் தயாரித்தது.

கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதை தவிர, மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கார்த்தி.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: adanga maru, Karthi, karthick thangavel
-=-