மீண்டும் தந்தையாகப்போகும் கார்த்தி…..!

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் கார்த்தி மீண்டும் அப்பா ஆகப் போகிறார்.

சூர்யாவின் தம்பியும் சிவகுமாரின் இளைய மகனுமான கார்த்திக்கும், ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சனி சின்னசாமிக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி திருமணம் நடந்தது.

இவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது .அந்த குழந்தைக்கு உமையாள் என்று பெயர் வைத்தனர். இந்நிலையில் ரஞ்சனி லாக்டவுனின்போது இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.