விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போது ரஜினி நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எப்போது என்பது கேள்விக்குறியாகவுள்ளது .

ரஜினி எப்போது தேதிகள் கொடுப்பார் என்பது முடிவாகாத சூழல் உள்ளதால் கார்த்தியை வைத்து ‘கைதி 2’ படத்தைக் குறைந்த நாட்களுக்குள் முடித்துவிடலாம் என்று லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கத் தயாராகவே இருக்கிறார் என்கிறார்கள்.