என்னது, கார்த்தி – ராஷ்மிகா படம் 90 பர்சன்ட் முடிஞ்சிடுச்சா.. ரசிகர்கள் ஆச்சரியம்..

டிகை ராஷ்மிகா மந்தன்னா தமிழில் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தமிழில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் நடிப்ப தாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளி யானது.
அதன்பிறகு கொரோனா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு கடந்த 5 மாதமாக படப் பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டி ருக்கிறது. சுல்தான் பட அப்டேட்டும் ஒன்றும் வெளியாகவில்லை. இதனால் ராஷ்மிகா, சுல்தான் படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இந்நிலையில்தான் அப்படத்தில் தயாரிப்பாளர் எஸ் ஆர் ஸ்ரீதர் ஒரு அப்டேட் வெளியிட்டிருக்கிறார்.
அதில், ”சுல்தான் படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. பெரும்பான் மையான எடிட்டிங் வேலைகளும் முடிந்தன. மீதமிருக்கும் வேலைகளையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் கம்பெனி தயாரிப்பில் மிகப்பெரிய படமாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் இருக்கும். இன்னும் ரிலீஸ் குறித்து எந்த திட்டமும் செய்யவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
இது கார்த்தி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி யிருப்பதுடன் ராஷ்மிகாவின் ரசிகர்களை யும் குஷிப்படுத்தி இருக்கிறது.