தம்பி கார்த்தியின் படத்துக்க அண்ணன் சூர்யாவால் சிக்கல்…

--

ண்ணன் சூர்யா தயாரிக்க, தம்பி கார்த்தி தயாரிக்கும் படம், “கடைக்குட்டி சிங்கம்”. பாண்டிராஜ் இயக்கம். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது.

சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடிந்துவிட்டது.

இப்போது தயாரிப்பாளரான சூர்யாவாலேயே படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. படத்தில் வரும் ரேக்ளா ரேஸ் காட்சியை எடுத்தபோது, அதை தனது செல்போனில் பிடித்து, சமூகவலைதளத்தில் பதிவிட்டார் சூர்யா.

ரேக்ளா ரேஸ் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே மாடுகளை துன்புறுத்தி படம் எடுத்திருக்கிறீர்கள் என்று விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.

இதனால் படக்குழு ஆடிப்போயிருக்கிறது. விலங்கு நல வாரியத்தால் ஏற்கெனவே மெர்சல் பட்ட பாடு தெரியாதா அவர்களுக்கு?