ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் , தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பாடல் பதிவு உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது நடிகர் கார்த்திக் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.