கார்த்திகை தீப விழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேறியது

திருவண்ணாமலை:

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இதையொட்டி கடந்த 12ந்தேதி
எல்லை தெய்வ வழிபாட்டுடன் விழா தொடங்கியது.

அன்றைய தினம் எல்லை தெய்வமான துர்க்கை அம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து  கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயிலின் 64 அடி உயர தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.

கொடி ஏற்றும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

10 நாட்களின் விழாவின் தினசரி சுவாமி வாகன வீதி உலா, விசேஷ பூஜைகள் நடைபெறும். சிறப்பாக 6ம் நாள் விழாவின்போது வெளித்தேரோட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 7வது நாள் மகா ரதம் பவனி நடைபெறும்

வரும் 23ம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இதற்காக மகாதீபம் ஏற்றும் கொப்பறை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Karthigai Deepam Festival: Tiruvannamalai Arunachaleswarar Temple flag hoisted, கார்த்திகை தீப விழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேறியது
-=-