திருச்செந்தூர்: திருச்செந்தூரில் கார்த்திகை தீபத்திருநாளின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீபத் திருநாளின் போது, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்தாண்டு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கார்த்திகை தீபத் திருநாளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் வைத்து இரவு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறும்.

ஆனால் கொரோனோ பொது முடக்கத்தால் கடற்கரையில் வைத்து வரும்  ஞாயிறன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் கோயிலில் அன்றைய தினம் காலை முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் இணைய முன்பதிவு மற்றும் நேரடி தரிசனம் செய்யலாம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.