மண்டல பூஜை: சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை:

பரிமலையில் கார்த்திகை மாத  மண்டல பூஜையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த16ந்தேதி  திறக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் கோவில்  நடை திறந்திருக்கும்போது,  கேரளா மட்டு மின்றி தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலி ருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள்.

இதை முன்னிட்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில்,  சபரிமலைக்கு வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக  வருவதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை-திருவனந்தபுரம் இடையே நவ.25 ஆம் தேதி முதல் ஜனவரி 20 வரை வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

திருவனந்தபுரம்-சென்னை இடையே நவ.24 ம் தேதி முதல் ஜன.19 ஆம் தேதி வரை வாராந்திர ரயில் இயக்கப்படும்.

திருவனந்தபுரம்-நிஜாமுதீன் வாராந்திர விரைவு ரயில் நவ.24 ஆம் தேதி முதல் ஜன.19 ம் தேதி வரை இயக்கப்படும்.

நிஜாமுதீன்-திருவனந்தபுரம் வாராந்திர விரைவு ரயில் நவ.26 ஆம் தேதி முதல் ஜன.19 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

இவ்வாறு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளத

கார்ட்டூன் கேலரி