கொல்கத்தாநேற்று ஐ.பி.எல் 2016 38-வது போட்டி குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதலில் 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது. கம்பீர் 5 ரன்னில் மனிஷ்பாண்டே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ராபின் உத்தப்பா மற்றும் சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து கொல்கத்தா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
FotorCreated
இருப்பினும், 5-வது விக்கெட்டுக்கு யூசுப் பதான், ஷகிப் அல்-ஹசனுடன் அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் 5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 134 ரன்கள் எடுத்து குவித்து சாதனை படைத்தது. யூசப் பதான்(63), ஷகிப் அல் ஹாசன்(66) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 20 ஓவர்களில் கொல்கத்தா 158 ரன்கள் சேர்த்தது.
குஜராத் அணியில் வெய்ன் சுமித் 27 ரன்னிலும், பிரன்டன் மெக்கல்லம் 29 ரன்னிலும், கேப்டன் சுரேஷ் ரெய்னா 14 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் குஜராத் அணி கடந்த சீல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்த தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். 29 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். குஜராத் அணி 18 ஓவர்களில் 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.