‘பேட்ட’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா…? சொல்கிறார் கார்த்திக் சுப்புராஜ்…..!

2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் திரைக்கு வந்தப் படம் ‘பேட்ட’.

இதனிடையே, பாலிவுட் இணையத்துக்கு அளித்த பேட்டியொன்றில் ‘பேட்ட 2′ குறித்து பேசியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

“படம் எடுக்கும்போது இரண்டாம் பாகம் பற்றியெல்லாம் நினைக்கவில்லை, ஆனால் படம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்துக்கான சாத்தியங்கள் குறித்து ரசிகர்கள் நினைத்தது சுவாரசியமாக இருந்தது.

பேட்ட 2’ படத்தின் கதை என்னவாக இருக்கலாம் என்பது வரை கூட சிலர் உத்தேசங்கள் கொடுத்தனர். ஆனால் இப்போதைக்கு ‘பேட்ட 2’-க்கான கதை என்னிடம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் நடக்கலாம்” என கூறியுள்ளார்