‘பேட்ட’ வெற்றிப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

--

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. அனைத்துத் தரப்பு மக்ககளின் ஏகோபித்த  பாராட்டை  பெற்ற பேட்ட படம்  வசூலிலும்  சாதனை படைத்து வருவதாக கூறப்படுகிறது.

பேட்ட படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சமீபத்தில் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம் நடிகர் தனுஷுடன் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை பெயரிடப்படாத புதுபப்படத்தை நடிகர் தனுஷை வைத்து  இயக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்து உள்ளார்.

காசி தியேட்டரில் நடைபெற்ற விழாவில் ரஜினி ரசிகர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ்,  “நடிகர் தனுஷை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாக கூறினார்”.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் தனுஷ் தனது டிவிட்டரில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் அதை உறுதிபடுத்தி உள்ளார்.