கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி ஜோடியாக திரிஷா?

சென்னை:

ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்  பெயர் சூட்டப்படாத ரஜினி படத்தில் நடிகை திரிஷாவுடம் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருகிறார். இவரும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை சிம்ரன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திரிஷாவும் ஒப்பந்தமாகி இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் எகிறி வருகிறது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடி சிம்ரனா, திரிஷாவா என்று கேள்வி எழும்பி உள்ள நிலையில், ரஜினிக்கு இரண்டு ஜோடிகளாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகிவிட்டார். இந்த நிலையில்,  நடிகை சிம்ரன், பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது நடிகை திரிஷாவுடம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி