திருச்சி மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்பட்டது

திருச்சி:

திருச்சி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம் இன்று ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்தையொட்டி, மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் சன்னதி அருகிலுள்ள 50 அடி உயர செப்புக் கொப்பரையில் மெகா தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக பிரமாண்ட திரி தயாரிக்கப்பட்டது. பருத்தி துணியால் 300 மீட்டர் நீளத்துக்கு தயாரிக்கப்பட்டது.

50 அடி உயரமுள்ள கோபுரத்தில் இடம்பெற்றுள்ள செப்பு கொப்பரையில் திரியை வைத்து எண்ணெயில் ஊறவைக்கப்பட்டது. இந்த கொப்பரையில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட 900 லிட்டர் எண்ணெயில் திரி ஊற வைக்கப்பட்டது.
சுமார் 13 நாள்களுக்கு நன்கு திரி ஊறிய பிறகு தேவையான எண்ணெய் ஊற்றி இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்பட்டது. இதையொட்டி செவ்வந்தி விநாயகர், தாயுமானவசுவாமி, மட்டுவார் குழலம்மை உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதனை நடைபெற்றது. .