அஜித் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்திகேயா….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டிருந்தது .

தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்த நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தயாராகி வருகிறது படக்குழு.

இந்த படத்தில் கார்த்திகேயா, ஹுயூமா குரேஷி நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியானாலும், படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய கார்த்திகேயா, தனக்கு அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வாழ்த்தியதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் .