கார்த்தி சிதம்பரம் சென்னை திரும்பினார்!

சென்னை:

ஞ்சம் வாங்கிய ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் வெளிநாட்டுக்கு சென்ற மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் இன்று லண்டனில் இருந்து சென்னை திரும்பினார்.

கடந்த 18ந்தேதி திடீரென லண்டன் புறப்பட்டு சென்று கார்த்தி சிதம்பரம் இன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

கடந்த 16ந்தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் காலை 6 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனை  நடைபெற்றது. சிதம்பரத்திற்கு சொந்தமான 14 இடங்களில் சோதனை நடைபெற்றது.

2007-08ம் ஆண்டில்  காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்த  ப. சிதம்பரம் மீது, பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜியின் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம், மொரீசியஸ் நாட்டு நிறுவனங்களிடமிருந்து ரூ. 305 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றது.

இதில், ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தும், ‘அட்வான்டேஜ் ஸ்டார்டஜிக் கன்சல்டிங் நிறுவனம்’ அளித்த ஆலோசனையின் பேரில் அனுமதி கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு கைமாறாக, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடமிருந்து, கார்த்தி சிதம்பரத்தின் ‘அட்வான்டேஜ் ஸ்டார்டஜிக் கன்சல்டிங் நிறுவனம்’மற்றும் செஸ் மேனேஜ்மென்ட் நிறுவனங்களுக்கு ரூ. 90 லட்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டப்பட்டது.

இதுகுறித்த விசாரணை  கார்த்தி சிதம்பரத்திடம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 18ந்தேதி கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே திட்டமிட்டபடி லண்டனுக்கு பயணமானார்.

இந்நிலையில் அவர் இன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார்.