காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மனு: உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு

டில்லி:

ல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, இது  அவசரமாக விசாரிக்கக் கூடிய அவ்வளவு முக்கியமான விஷயம் அல்ல என்று கூறி வழக்கை சாதாரண வழக்குகளின் பட்டியலில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தை தவறான பயன்படுத்தி, அவரது மகனாக காா்த்தி சிதம்பரம் பல்வேறு பண பரிவர்த்தனை முறைகேடுகளில்  ஈடுபட்டதாக சிபிஐ, அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

அவர்மீது, ஏா்செல் – மேக்சிஸ் வழக்கு, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு, கருப்புபண மோசடி வழக்கு உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இருந்தாலும், தனது அலுவலக பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டியது இருப்பதாக கூறி, உச்சநீதி மன்ற அனுமதியுடன் வெளிநாடு சென்று வருகிறார். கடைசியா கடந்த   செப்டம்பா் 20ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் வெளிநாடு செல்லலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அவரது முன்ஜாமின் தடை வரும் 26ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்தார்.

ஆனால், கார்த்திக்கின் மனுவை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்க மறுத்து விட்டார். இந்த மனுமீதான விசாரணை அவ்வளவு அவசரம் கிடையாது என்று கூறி, மனுவை சாதாரண வழக்குகளுடன் பட்டியலிட உத்தரவிட்டார்.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பல நிலுவையில் இருப்பதால் உடனே விசாரிக்க முடியாது; கார்த்தி சிதம்பரம் நவ.3ம் தேதி வெளிநாடு செல்ல அனுமதி கோரும் மனு நாளை விசாரிக்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.