கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘சுல்தான்’…!

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் ராஷ்மிகா மந்தானா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

ரெமோ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ் கண்ணன் இந்தப் படத்தை ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 13 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு விவேக் -மெர்லின் இணைந்து இசையமைக்கின்றனர்,

யோகி பாபு, மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு ‘சுல்தான்’ என தலைப்பிட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது..

கார்ட்டூன் கேலரி